PM Modi :இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் பிரதமர் மோடி உரை!

Advertisements

சைப்ரஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக, நேற்று சைப்ரஸ் சென்ற அவர், லிமாசோலில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூடன் இருநாட்டு தொழிலதிபர்களையும் இணைந்து சந்தித்து பேசினார். அப்போது அவர்,  அந்நாட்டு தொழில் அதிபர்களிடம்   இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார். எரிசக்தி, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். மேலும் 10 ஆண்டுகளில் தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்,வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *