ஈரான் – அமெரிக்கா போர் முடிவுக்கு வராது – மார்கோ ரூபியோ அதிரடி.!

Advertisements

அணுசக்தி ஒப்பந்தமின்றி ஈரான்-அமெரிக்கா போர் முடிவுக்கு வராது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை யடுத்து, பாகிஸ்தான் வாயிலாக அமெரிக்காவுக்கு 10 அம்ச கோரிக்கையை ஈரான் அனுப்பியது. அதில், ஈரான் மீதான முற்றுகையை அமெரிக்கா விலக்கினால், போரை முடிவுக்கு கொண்டு வரவும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளது.

ஆனால், அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை ஈரான் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நேர்மையற்ற முறையில் ஈரான் பேச்சு வார்த்தை நடத்துவதாகக் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, ஈரானின் கோரிக்கை தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ஈரானியர்கள் கால அவகாசத்தை பெற விரும்பும் திறமையான பேச்சாளர்கள் என்றும் அணுசக்தி விவகாரத்தை விவாதிக்காமல் எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

ஈரானில், தீவிர மதவாத ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்கள் எதிர்காலத்தில் அணு ஆயுதங்கள் வேண்டும் என முடிவேடுப்பர் என்றும் கூறினார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து தப்பிக்கவே சமாதான திட்டத்தை முன் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *