டிடிவிக்கு 10 சீட் , ராமதாஸுக்கு 3 சீட் , கமலுக்கு 2 சீட் , மோடியின் பராசக்தி ஆட்டம்.!

Advertisements
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது திமுக கூட்டணியில் ராமதாஸுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. மருத்துவர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது . இது தவிர நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையக் கட்சிக்கு திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது .
இதற்கிடையே பிரதமர் மோடி 72 மணி நேரம் பராசக்தி ஆட்டம் ஆடி இருக்கிறார்.  தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தற்பொழுது முதல் கட்டமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , கடந்த இண்டாம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடை பயணம் மதுரையில் நிறைவடைந்தது .
மொத்தம் பதினோரு நாட்களில் வைகோ தினமும் சுமார் 15 முதல் 17 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசி இருக்கிறார். தற்பொழுது அவருக்கு 82 வயதாகிறது..இந்த தள்ளாத வயதிலும் அவர் 150 கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து சென்றிருக்கிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது . இதனிடையே , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக , அமித்சாவும் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து நீங்கள் தாராளமாக டிடிவி தினகரனுக்கு தொகுதி ஒதுக்கி தரலாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இதன் அடிப்படையில் , தற்போது பாரதிய ஜனதா கட்சியினர் கிட்டத்தட்ட ஐம்பது தொகுதிகள் தேவை என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவி தினகரனுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கி தர உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பந்தம் தெரிவித்துள்ளார் . இதனிடையே மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு திமுக தரப்பில் 10 தொகுதிகள் ஒதுக்கி தரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது .
இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் முதல் கட்டமாக மருத்துவர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி , அருள் எம் எல் ஏ , ஜி கே மணி ஆகிய மூன்று பேருக்கும் மூன்று தொகுதி ஒதுக்கி தருவதாகவும் மாம்பழ சின்னத்துக்கு சிக்கல் இருப்பதால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது ,
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது . இதில் ஒரு தொகுதி கோவையில் அடங்கும் என தெரிகிறது . பரபரப்பான இந்த சூழ்நிலையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் தற்பொழுது இந்திய ஜனநாயக கட்சியில் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.  இவர் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார் . இதை தொடர்ந்து அவர் அதிமுகவுக்கு மாறப் போவதாக செய்திகள் கசிந்தன .
இது தொடர்பாக,  தற்பொழுது லீமா ரோஸ் விளக்கம் அளித்து இருக்கிறார் . எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் . நான் அதிமுகவில் சேரவில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார் . இதற்கிடையே,  குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பிரதமர் மோடி 72 மணி நேரம் தியானம் செய்து இருக்கிறார். அவரது தியான நிலையை பார்த்த ஏராளமான சன்னியாசிகள் அதிர்ச்சியில் மிரண்டு போயிருக்கிறார்கள் .
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில்,  ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக சுவாபிமான் என்ற விழா நடைபெற்று வருகிறது . இந்த ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ஓம் என்ற ஜெப நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் . இதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக குஜராத் மாநிலம் வந்துள்ளார். விழாவுக்கு முதல் நாளே வந்துவிட்ட பிரதமர் மோடி இந்த தியானத்தில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார் .
இதனைத் தொடர்ந்து , நூற்றுக்கணக்கான சன்யாசிகளுடன் ஓம் ஜெபத்தில் பங்கேற்று தியானம் செய்தார் . சோம்நாத் ஆலயம் என்பது சிவபெருமானின் 12 போதி லிங்கங்களில் முதன்மையான லிங்கம் இங்கு இருப்பதாக கருதப்படுகிறது . இதற்கிடையே பிரதமர் மோடி டெல்லியில் புதிய அலுவலகத்திற்கு குடி பெயர்கிறார்.  அந்த அலுவலகத்திற்கு சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்துடன் அரசு அதிகாரிகள் பணியாற்றுவதற்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல் முருகன் டெல்லியில் ஒரு தனி பங்களாவில் வசித்து வருகிறார்.  பிரதமர் மோடி ஆண்டுதோறும் அங்குதான் பொங்கல் விழா கொண்டாடுகிறார்.
இந்த முறையும் அங்குதான் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது மும்பை நகரம் சர்வதேச நகரம் என்று குறிப்பிட்டு பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது .
மும்பை நகரம் மகாராஷ்டிராத்திற்கு சொந்தமானது இதனை சர்வதேச நகரம் என அண்ணாமலை எப்படி குறிப்பிடலாம் . எனவே அவர் மும்பை வந்தால் அவரது லுங்கியை கழட்டி காலை வெட்டுவோம் . அவர் மீது கருப்பு மை பூசுவோம் என அங்குள்ள தாக்கரே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி பிடித்து வருகின்றன .
பதிலுக்கு அண்ணாமலையும் நான் மீண்டும் மும்பை வருகிறேன் முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள் என சவால் விடுத்திருக்கிறார் . தற்பொழுது மராட்டிய மாநிலம் முழுவதும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என போர்க்கொடி பிடித்து வருகிறார்கள் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *