
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய நிலங்களில் இரைதேடி வரும் மயில் கூட்டங்களை வாகன ஓட்டிகள் கண்டு இரசித்துப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
வாழப்பாடி முத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் முப்பதுக்கு மேற்பட்ட மயில்கள் கூட்டமாக வந்து தானியங்களைக் கொத்தித் தின்கின்றன. இந்த அழகிய காட்சிகளை வாகன ஓட்டிகள் கண்டுகளித்துப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
தேசியப் பறவையான மயில் இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலையில் இரைதேடும் பொழுதும் சாலையைக் கடக்கும் பொழுதும் அதிக வேகத்தில் வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதைத் தடுக்கவும் தேசியப் பறவையைக் காக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



