பக்தர்களுக்குப் பாசி படிந்த குடிநீரா?

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தில் பல்லி, அட்டைப்பூச்சி இருந்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில்  பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தில் அட்டைப்பூச்சி, பல்லி, பாசிகள் இருப்பதைக் கண்ட பக்தர் ஒருவர் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

கோவிலுக்கு நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் குடிநீர் எந்திரத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *