Ttf Vasan: 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம்  ரத்து!

Advertisements

10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம்  ரத்து.

சர்ச்சைக்குரிய யூடியூப்பரான டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.

யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களைப் பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார் டிடிஎப் வாசன். அவர் அதிவேகமாகப் பைக் ஓட்டி வீடியோ பதிவிடுவதால் அது அவரது ரசிகர்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் அதிவேகமாகப் பைக் ஓட்டி அதில் சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன், தற்போது கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *