கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் இ.கே.ஒய்.சி. பணியை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


