பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு நிதி உயர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மாநாட்டில் சமூக நீதித்தறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் அம்மா மாளிகையில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாட்டில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னயரசு பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அடக்குமுறை மற்றும் பாலின பாகுபாட்டைத் தடுப்பதற்கு விரிவான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் சிங்கப்பெண் திட்டங்களின் கீழ், மகளிர் விழிப்புணர்விற்காக 11 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இவற்றை நடைமுறைப்படுத்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
மேலும், அம்பேத்கர், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டும் உரியவர் அல்ல, அவர் இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும், அனைத்து மக்களுக்குமான பொதுவான தலைவர் என்றும். பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு நிதி உயர்வில், முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.


