பாடகர்களைத் தெருக்கூத்தாடிகள் என முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி அரசு சார்பில் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். சூரசம்கார நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு அரோகரா என பாடியது குறித்து பாடகர் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறினார்.
முதலமைச்சர் விஜய் புகழ்ச்சியை விரும்புவர் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் பாடகர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் பேசுவது ஏற்புடையதல்ல என்று குற்றம்சாட்டினார். பாடகர்களைத் தெருக்கூத்தாடிகள் என முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் கோவில் நிலங்களை திருடிய திமுகவினர் கோவில் விதிமுறைகளை பற்றி பேசி விமர்சிப்பதா? என்று வினவியுள்ளார்.


