போக்குவரத்து தேவைக்காக புதிதாக 1000 விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கான தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நிலவும் கடுமையான விமானப்பற்றாக்குறையைச் சமாளிக்க மேலும் ஆயிரம் பயணிகள் விமானங்களை வாங்க, இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாள்பயணமாக எகிப்து சென்றுள்ள பியூஷ் கோயல், நேற்று அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் தற்போது பயணிகள் விமானங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார்.
இதனைச் சமாளிக்க மேலும் ஆயிரம் விமானங்களை வாங்கத் தயாராக இருப்பதாகவும், விமானங் களை விரைவாக விநியோகம் செய்யுமாறு, முன்னணி சர்வதேசவிமானத்தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

