பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தில்லியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாது பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். கன்னிமாரா நூலகத்தில் 550 ஏஐ புத்தகங்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏன் பதிலளிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். நூலகங்களில் புத்தக கொள்முதலில் ஊழல் நடந்தது திமுக ஆட்சியில் தான் என்றும் தவெக ஆட்சி காலத்தில் ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப்படும் என்றும் கைப்பற்றப்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


