மஹி உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்..! சாக்ஷியின் நெகிழ்ச்சிப் பதிவு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனிக்கு, அவரது மனைவி சாக்ஷி தோனி உருக்கமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“சில அழகான பயணங்கள் தொடங்க வேண்டும் என்றால், சில பயணங்களை முடித்தாக வேண்டும். இத்தனை ஆண்டுகளாக மஹியை நேசித்து, ஆதரவளித்து, நம்பிய அனைவருக்கும் நன்றி. இந்த அன்புக்கு நாங்கள் என்றும் கடன்பட்டுள்ளோம். புதிய தொடக்கம், புதிய பயணம், புதிய நினைவுகள். எப்போதும் உங்களை நினைத்து பெருமைப்படுவேன் மஹி” என சாக்ஷி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “So Proud of You, Mahi” எனத் தோனியின் பயணம் குறித்த தனது பெருமையையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். சாக்ஷியின் இந்த உருக்கமான பதிவு தோனி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *