ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்..தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!

Advertisements

தமிழகத்தில் நடைபெற்றுவரும் மத்திய அமலாக்கத்துறை சோதனையில் உண்மை நிலை என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் 2021ல் கொடுக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு இன்னும் தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அடுத்தாண்டு 2026 ஜனவரி 9-ந் தேதி கடலூரில் தே.மு.தி.க. சார்பில் பிரமாண்டமான மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் அதற்குள் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதி, ஆட்சியிலும் அதிகாரத்தில் பங்கு அதாவது கூட்டணி ஆட்சி அமைப்பது உள்ளிட்டவை எல்லாம் முடிவு செய்து மிகப்பெரிய அறிவிப்பாக இந்த மாநாடு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் டாஸ்மாக்க உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகத்திலேயே இதுவரையில் நடைபெறாத வகையில் மேகா ஊழலில் ஈடுபட்டுள்ள திமுகவின் பினாமியாக செயல்படும் முக்கிய பிரமுகர் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திவரும் சோதனை என்பது புதிதல்ல தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திமுக ஆட்சியாளர்கள் ஊழலில் ஈடுபடுவது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பல 100 கோடி மதிப்புள்ள அசையும் அசையா சொத்து வனங்களையும், பல கோடி ரொக்க பணத்தையும் கைப்பற்றுவது வாடிக்கையான ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்து லஞ்சமாக பெற்றால் அதற்கான தண்டனையை திமுக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவின் முக்கிய பிரமுகர்கள், திமுகவின் பினாமிகள் மற்றும் திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரமுகர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *