போட்டியின்றி எம்பியாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி ..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் களம் தற்போதைய முக்கிய அரசியல் நகர்வாக மாறியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அதிமுக எம்பி சி.வி. சண்முகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரது மாநிலங்களவை எம்பி பதவி காலியானது. அந்த ஒரு இடத்திற்குத்தான் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசு, தங்களது போஸ்ட்-போல்  உடன்பாட்டின்படி இந்த ஒரு எம்பி சீட்டை கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜூன் 5 அன்று முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.இந்நிலையில் , மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது ..அந்த வகையில் , போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வானார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *