மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை – நீதிமன்றம் அதிரடி!

Advertisements

சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட வாலிபர் சதீஷுக்கு தண்டனை விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்லப் பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகச் சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் வாலிபர் சதீஷ் குற்றவாளியென அறிவிக்கப்பட்டாலும், தண்டனை விவரம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி சதீஷுக்கு தூக்குத் தண்டனை அளித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதாவது, குற்றவாளி சதீஷுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, மூன்று சிறை தண்டனை காலம் முடிந்த பிறகு இரண்டு முறை தூக்கிலிடவும் உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *