
நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாகத் தேங்காய் எண்ணெய் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கொப்பரை தேங்காயை கைகளில் ஏந்தி பாஜகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாகத் தேங்காய் எண்ணெய் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கைகளில் தேங்காய் கொப்பரையை ஏந்தியவாறு அரசுக்குக் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இதில்பா
மேலும் நடைபெற்ற கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தின்போதுதமிழக தென்னை விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் NAFED நிறுவனத்திலிருந்து கொப்பரையை தேங்காய்களை தமிழக கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யவும்.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாகத் தேங்காய் எண்ணெய் வழங்கும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கைகளில் கொப்பரை தேங்காயை கைகளில் ஏந்தியவாறு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகச் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



