Advertisements

சென்னை காவல்துறையினர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையால் மதுரை ஆதீனம் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக மதுரைஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையிலிருந்து தனது காரில் சென்னை வந்தார்
வரும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஆதினத்தின் கார் விபத்துக்குள்ளானது இதில் எந்த காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார்
இதையடுத்து சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்
இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை ஒரு சிசிடிவி ஆவணத்தை வெளியிட்டது
அதில் ஆதீனத்தின் கார் தான் வேகமாக வந்ததாகவும் எதிரே வந்த கார் குறைந்த வேகத்தில் வந்து பிரேக் போட்டதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் என்பவர் சென்னை காவல்துறை ஆணையருக்கு புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளார் அதில் மதுரை ஆதீனம் விழா மேடையில் பேசியதையும் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதையும் குறிப்பிட்டு மதுரை ஆதினத்தின் இந்த செயல் இந்து மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
இது கலவரத்தை தூண்டும் நோக்கம் ஆகும் அவரது பேச்சால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருக்கிறது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவருக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்
இதன் அடிப்படையில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் பொது தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
Advertisements

