Arunachalesvara Temple: நான்கு மாட வீதிகளில் வலம் வந்த நடராச பெருமான்!

Advertisements

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப மைச்சாற்றப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராச பெருமாள் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவகாம சுந்தரி சமேத நடராச பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகுவிமர்சையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை மாதம் முதல் பங்குனி மாதங்கள்வரை உள்ள மாதங்களில் மார்கழி மாதத்தினை ஆன்மீக மாதம் என்று கூறுவர், இந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

முன்னதாக நேற்று இரவு திருக்கோவிலில் உள்ள 1000 கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராசர் எழுந்தருளினர், இன்று காலைச் சிவகாம சுந்தரி சமேத நடராச பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 06 ஆம் தேதிவரை 11 நாட்கள் திருக்கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து தீபமை கொண்டு வரப்பட்டு அதற்குத் திருக்கோவிலின் சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனமான இன்று சிவகாம சுந்தரி சமேத நடராச பெருமானுக்கு தீபமை நெற்றியில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகாம சுந்தரி சமேத நடராச பெருமான் 1000 கால் மண்டபத்தின் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளதில் காட்சியளித்து அதனைத் தொடர்ந்து ஊர்வலமாகப் புறப்பட்டுத் திருமஞ்சன கோபுர வாயில் வழியாகத் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

குறிப்பாக ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 தினங்கள் மட்டும் திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராச பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது, திருகார்த்திகை தீபத்திருவிழாவின்போது நெய்க்காணிக்கை செலுத்திய பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் தீப மையானது இன்று முதல் பிரசாதமாக வழங்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *