
குஜராத்தில், சர்தார் வல்லபாய் பட்டேலின் நூற்று ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற தேசிய ஒற்றுமை அணிவகுப்பு விழாவில் பிரதமர் நநேந்திர மோடி கலந்து கொண்டார்.
குஜராத், ஏக்தா நகர் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் நூற்று ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நநேந்திர மோடி கலந்து கொண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவச் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அவர், தேசிய ஒற்றுமை அணிவகுப்பில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றியதைப் பார்வையிட்டு மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து, விமானப்படைத் தலைவர் சூர்யகாந்த் தலமையிலான வீரர்கள் வானில் பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.
இதில், வானில் தேசியக் கொடியின் மூவண்ணத்தை வரைந்து சாகசம் செய்ததைப் பிரதமர் மோடி கண்டு ரசித்தார். பின்னர், விழாவில் பிரதமர் உரையாற்றிய் போது, சர்தால் வல்லபாய் பட்டேலின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாள் விழா என்றும் இவ்விழாவைக் கொண்டாடுவதற்காகக் கோடிக் கணக்கான மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த, ஒற்றுமை தான் நம் நாட்டுக்கு மக்களுக்கு எப்போதும் தேவை என்றார். சுதந்திரத்துக்குப் பின்னர் சர்தார் பட்டேல் தான் ஐந்நூந்நு ஐம்பது குறுநில மன்னர்களை எல்லாம் ஒன்றினைத்து பாரதம் என்ற தேசத்தை உருவாக்கினார் என்று பெருமிதமாகத் தெரிவித்தார்.



