S. Muthusamy: ரூ. 28 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள் துவக்கம்!

Advertisements

S. Muthusamy: கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் ஒன்றியத்தில்  ரூ 28 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பல்வேறு  வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்துகொண்டு பணிகளைத் துவக்கிவைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி மற்றும் பெருமுகை  ஆகிய பகுதிகளில் சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயர் மட்ட பாலம் மற்றும் ஆரம்பசுகாதார நிலையதிற்கு கூடுதல்  கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துச்சாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய திட்டத்திற்கான பணிகளைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடாஜலம் மற்றும் நெடுஞ்சாலை துறை  அதிகாரிகள் உட்பட பொதுமக்கள பலரும் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *