Advertisements

காமேனியின் இறுதிச்சடங்குக்கு வந்தவர்களை ஒரே குண்டில் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காமேனியின் இறுதிச்சடங்குக்காக ஈரான் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள். எனவே, தாங்கள் நினைத்தால் ஒரே ஷாட்டில் அவர்கள் அனைவரையும் காலி செய்ய முடியும், ஆனால், நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார். ஏனென்றால் அவர்களை அழித்துவிட்டால், அதற்குப் பிறகுப் பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என விமர்சித்தார்.
இதற்குப் பதிலடியாக ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளது. நீங்கள் அயதுல்லா காமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளது. இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. உங்களால் இந்த மக்களின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்காவுக்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது. அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என தெரிவித்துள்ளது.
Advertisements



