தமிழ்நாட்டின் ஆளுநராக இன்று பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத்.!

Advertisements

கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநராகப் பதவியேற்று கொண்டார்.

சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் பதிவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முன்னிலையில், கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநராகப் பதவியேற்று கொண்டார்.

தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குச் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில், துறைச் சார்ந்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *