விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாகிய நிலையில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் பரஸ்பரம் தொடுத்து வரும் தீவிரத் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் 86 வயதான கமேனி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கழித்து கிழக்கு ஈரானில் உள்ள கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹாத் நகருக்கு ஈரானிய தேசியக் கொடி போர்த்தப்பட்ட கமேனியின் சவப்பெட்டி நினைவிடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
கமேனியின் மகனும் அவரது அடுத்த வாரிசுமாக அறிவிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம். அவரது மகன் கலந்துகொள்ளாததன் காரணம் உயிரே உயிரே அமெரிக்கா கிட்ட இருந்து தப்பித்து ஓடிரு. அப்பதான் நம்ப நாட்ட காப்பாத்த முடியும் என்று அடிப்படையில் இந்த முடிவினை அவரது மகன் எடுத்தாராம்.
வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் படைகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாகப் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் கொடூரத் தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில் இந்த இறுதிச்சடங்கு நடந்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் நகரங்களை இணைக்கும் ரயில்வே பாதையை இலக்கு வைத்து அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக அரசு ஊடகம் கூறியுள்ளது. இதற்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
மற்றொரு அமெரிக்க நட்பு நாடான ஜோர்டானில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஈரானில் இருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய போரின் முதல் நாளிலேயே, கமேனி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆறு நாட்கள் நீடித்த மாரத்தான் இறுதிச் சடங்குகளின் மஷ்ஹாத்தில் நடந்த அடக்கத்தின் போது மொஜ்தபா கமேனி வருவாரா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனெனில் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை எனக்கூறப்படுகிறது.
நாடாளுமன்ற சபாநாயகரும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் தலைமைப் பிரதிநிதியுமான முகமது பாகர் காலிபாஃப், சக்திவாய்ந்த தலைமை நீதிபதி கோலம்ஹொசைன் மொஹ்சேனி எஜேய் மற்றும் கமேனியின் மூத்த மகன் முஸ்தபா கமேனி ஆகியோர் மட்டுமே நினைவிடத்தில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
ஆனால், இறுதிச்சடங்கின் மற்ற நாட்களைப் போலவே நேற்றும் மொஜ்தபா கமேனி வரவில்லை. அவர் பொறுப்பேற்றதில் இருந்து வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி 28 தாக்குதலில் அவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்து மஷ்ஹாத் நகரில் திரண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கமேனி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையில், ட்ரம்பைக் கொல்வதற்கான ஈரானின் புதிய சதித்திட்டத்தை தங்களது உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, ஈரானின் ஒரே ஒரு சிவிலியன் அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக புஷெர்மாகாணத்தின் துணை ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
புஷெர் நகரின் புறநகரில் உள்ள ராணுவத் தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தற்போது ஈரானில் தங்கள் ராணுவம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளார்.ஈரான் ராணுவம் தனது பங்கிற்கு, குவைத்தில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அமைப்பு மற்றும் பஹ்ரைனில் உள்ள எரிபொருள் தொட்டிகளை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாகக் கூறியுள்ளது.
இருப்பினும், ஈரான் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்கப் படையினருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆக இப்படி ரெண்டு நாடுகளும் மாறி மாறி போர் தொடுத்து கொள்வதனால் மற்ற உலக நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பகிறது. ஆக இவர் ரெண்டு நாடுகளும் போரை நிறுத்தவில்லை என்றால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் இந்த ரெண்டுகள் மீதும் போர் தொடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
ஆக இந்த ரெண்டு நாடுகளும் கை உலுக்கி சுமுக உடன்படிக்கைக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.