
மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்தியதால் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி நாலரை இலட்சம் கோடி ரூபாயில் இருந்து இருபது இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் வேளாண் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பியுஷ் கோயல், நாவற்பழம், லிச்சி, அன்னாசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதன்மூலம் இந்தியா தனது வேளாண் விளைபொருள் ஏற்றுமதிச் சந்தையை விரிவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேளாண்பொருட்கள் விளைச்சலைப் பெருக்கவும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியைப் போக்கவும் சொட்டுநீர்ப் பாசனத்தின் தேவையை உணர்த்தும் மாபெரும் இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் பியுஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
மானியங்களை அதிகரிப்பதன் மூலமும், இடுபொருள் செலவைக் குறைப்பதன் மூலமும் உழவர்களின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


