
போர் பதற்றத்திற்கு பிறகு பல மார்க்கங்கள் வழியாக 75 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என மத்திய பெட்ரேலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 12 ஆவது நாளாக நீடித்து வருகிறது.தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியது. இதனால், இந்தியாவில் எரிவாயு,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரேலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா பேசியபோது, எல்.என்.ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உடன் 2 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுபாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றத்திற்கு பிறகு பல மார்க்கங்கள் வழியாக 75 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என்றும் இது வழக்கத்தை விட கூடுதல் என்றும் குறிப்பிட்டார். இதனால், நுகர்வோர் முண்டியடித்துக் கொண்டிய அவசியம் இல்லை என்றும் முன்பைவிட கூடுதலாக உற்பத்தியை அதிகரித்தது வருகின்றன என்றும் கூறினார்.




