சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  28 பேர் பலி.!

சீனாவில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  28 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

சீனாவின், புஜியான் மாகாணத்தின் அருகே ஜின்ஜியாங் நகரில் உள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் பரவியது.  தொடர்ந்து, தொழிற்சாலையில் உள்ளே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு நோக்கி ஓடினர். ஆனால், தீ மற்றும் புகை மிக வேகமாகப் பரவியதால் அவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தத் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இந்த விபத்தில் 28 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *