Tamilnadu Byelection Stop : 5 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் தடை.!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதிகள் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

எந்தெந்த தொகுதிகள்? திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு:

  • இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்குத் தடை விதித்துள்ளது.

  • இந்த வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்றச் செயலாளர் மற்றும் முதல்வர் விஜய் ஆகிய தரப்பினர் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

  • நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பில் இருந்த அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *