மீண்டும் சூடுபிடிக்கும் இராமர் கோவில் வழக்கு.. ஜூலை 13-ல் விசாரணை..!

இராமர் கோவில் அறக்கட்டளைக்குப் பெற்ற நன்கொடைப் பணம் கையாடல் செய்யப்பட்டது குறித்துச் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை ஜூலை 13ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நன்கொடையாகப் பெறப்பட்ட பணத்தில் 200 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாகவும், பல நகைப்பெட்டிகள் களவாடப்பட்டதாகவும் ஆம் ஆத்மிக் கட்சித் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையில் நிதி முறைகேடுகள் நடைபெற்றது குறித்துச் சுதந்திரமான நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, மோகனா ஆகியோர் அமர்வில் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் ஜூலை 13ஆம் நாள் விசாரணைக்கு வரவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *