இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று, ஈரான் அறிவிப்பு

Advertisements

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று, ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானில் கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 224 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மறுபுறம் இஸ்ரேல் மீது நேற்று ஈரான் அலையலையாக டிரோன்களையும் 100-க்கு மேற்பட்ட ஏவுகணைகளையும் வீசியது. இதில் பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 8 பேர் பலியாகினர். டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரானின் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது. இதில் தூதரகம் லேசான சேதமடைந்தது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலில்,  இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக் கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக, ஈரான் அரசு ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன. மேலும் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *