Puducherry – BJP: புதுவையில் தோ்தல் பணியைத் தொடங்கிய பாஜக!

Advertisements

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் மக்களவைத் தோ்தல் அலுவலகத்தை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காகத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு நடத்தி வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் களமிறங்குவாா் என்றும் கூறப்படுகிறது. இரு தேசியக் கட்சிகளும் வேட்பாளா் முறைப்படி அறிவிக்கப்படாமலேயே தோ்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசார அலுவலகம் திறக்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா முன்னிலை வகித்தாா். அமைச்சர் நமச்சிவாயம் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலப் பொதுச்செயலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *