தமிழக பாஜக உள்குத்து டெல்லியில் பஞ்சாயத்து..!

Advertisements
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்குத்து வேலைகள் உச்சகட்டமாக அரங்கேறி வருகின்றன . ஏற்கனவே அண்ணாமலை நைனார் நாகேந்திரன் இடையே திரை மறைவில் மோகன் இருந்து வருகிறது தற்பொழுது வானதி சீனிவாசகம் அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் .
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலைக்கான ஆதரவாளர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள் எனவே பாரதிய ஜனதா கட்சியில் நடக்கும் உள்குத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த நிர்மலா சீதாராமன் அண்ணாமலை பெயரை சொல்லாமல் அவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் .
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்த போதும் அண்ணாமலை மட்டும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் . முன்னதாக சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை மோதல் தொடர்பாக நயினார் நாகேந்திரனை அழைத்து எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தொடர்பாக அண்ணாமலை டெல்லி மேல் இடத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் உடனடியாக டெல்லிக்கு பறந்து வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது .
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்று உள் கட்சி பிரச்சனை இருந்தால் அது வெற்றியை பாதிக்கும் என்ற அடிப்படையில் டெல்லி மேலிட குழு தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ளது . எனவே விரைவில் தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் டெல்லி செல்ல இருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *