ஈரான் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்குதல் – டிரம்ப்.!

ஈரான் சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையான இருவாரக்காலப் போர் நிறுத்தம் புதனன்று முடிவடைய உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னெடுப்பில் இஸ்லாமாபாத்தில் இன்று அமெரிக்க – ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளிடையே மீண்டும் அமைதிப்பேச்சு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரானின் சரக்குக்கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கப்பலை நிறுத்தும்படி முறைப்படியான எச்சரிக்கை கொடுத்தும் அதைப் பொருட்படுத்தாததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் அந்தக் கப்பலின் எஞ்சின் அறையில் ஒரு ஓட்டை விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்க கப்பல்கள் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேச்சில் பங்கேற்க அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வன்ஸ் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *