
சென்னை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள்குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவடி நாசர், சி.வெ கணேசன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாகத் துறை எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் சிறந்த முறையில் வளர்ந்துள்ளது. நகர்ப்புற மக்கள்தொகை 48 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
