இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், இயேசு பிரான் உயிர்த்தெழுந்த திருநாளைக் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்துவச் சொந்தங்களுக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள செய்தியில், அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தவர் இயேசுபிரான் எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளில் அறியாமை இருள் அகன்று, கொடிய வறுமை நீங்கி, இறவாத இன்பம் நிறைந்து இறையருள் பெருகட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள செய்தியில், அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
