
சென்னை:
நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.
முதலில் சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்துக் கவர்னர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க கவர்னர் ஆர்.ரவி. வருகை புரிந்தார். கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து, கைக்குலுக்கி வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து தேசிய கீதம் இசைக்கக் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
