Pollachi: இடைவிடாது யோகாசனம் செய்த மாணவ, மாணவிகள்!

Advertisements

பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் நோபல் உலக சாதனைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 20 நிமிடங்கள் இடைவிடாது யோகாசனம் செய்து அசத்தியுள்ளார்.

பொள்ளாச்சி: யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் யோகா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள கேசவ் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி சார்பில் யோகா நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுடனர்.  உத்திட்டபத்மமூல திதி பாதாஷ்சனா, ஆசனத்தில் 20 நிமிடங்கள் இடைவிடாமல் யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து 7 ஆம் வகுப்பு மாணவி கபினி மித்ரா தண்ணீர் கோப்பையைத் தலையில் வைத்தவாறு *பத்மபக்காஷ்னா* ஆசனத்தில் 30 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தார். மாணவ, மாணவிகளின் இந்தச் சாதனை நிகழ்வை அங்கிருந்து பொதுமக்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா கலை மனதை ஒருநிலைப்படுத்தும் உடல் ஆரோக்கியத்தை தேனி காக்கவும் முக்கிய பங்கு வைக்கிறது. தற்போது பொதுமக்கள் மத்தியில் யோகா பயிற்சி எடுக்கும் ஆர்வம் குறைந்து வருவகிறது. யோகப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம், ஒழுக்கம் ஞாபகத்திறன் அதிகரிக்கும் மன உளைச்சலின்றி வாழ முடியும் என்று மாணவி கபினி மித்ரா தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *