அன்புமணி தலைமையில் தொகுதிப் பொருப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்.!

சென்னை அருகே பனையூரில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் சட்டமன்றத் தொகுதிப் பொருப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையகத்தில் தலைவர் அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டிப் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏற்கெனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாமகவுக்கு உள்ள வெற்றி வாய்ப்புக் குறித்துத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஏற்கெனவே கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வில் ஈடுபட்ட பாமக தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தலைவர் அன்புமணி ஆலோசனை நடத்தினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி 23ஆம் நாள் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *