Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 21.09.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 21.09.2023

 

மேஷம்


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பொருளாதார ரீதியாகப் புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

ரிஷபம்


இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலையில் பணிசுமை குறையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மிதுனம்


இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளைக் குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு ஆறுதலை தரும். கடன்கள் குறையும்.

கடகம்


இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்


இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

கன்னி


இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

துலாம்


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்


இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பிள்ளைகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு


இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும்.

மகரம்


இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காகப் போட்ட புதிய திட்டங்கள் வெற்றியைக் கொடுக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்


இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

மீனம்


இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்தச் செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *