Arakkonam: ரயிலில் அடிபட்டு ஆண் மான் பலி!

Advertisements

அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு ஆண் மான் பலி, பெண் மான் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்காட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு  படை உதவி ஆய்வாளர்கள் ஹேமந்த் குமார், அன்பு செழியன், காவலர் போலாரம ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – திருத்தணி ரயில் மார்க்கத்தில்  நார்த் கேபின் எனப்படும் இடத்தில் தண்டவாளம் அருகே இரண்டு மான்கள் ரயிலில் அடிபட்டுக் கிடப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வனத்துறை வனவர் துரைமுருகன் மற்றும் வன காவலர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தபோது ஒரு வயது மதிக்கத் தக்க ஆண் மான் இறந்த   நிலையிலும், பெண் மான் படுகாயத்துடன் இருந்துள்ளது.

உடனடியாகக் கால்நடை மருத்துவர்கள் புவனேஷ் குமார் மற்றும் பாலா அபிராமி ஆகியோர் வரவழைக்கப்பட்டு பெண் மானுக்குச் சிகிச்சை அளித்தனர்.மேலும் இறந்த மான் அதே இடத்தில் பிரேத பரிசோதனைக்குப் பின் தீயிட்டு எரிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு  படை உதவி ஆய்வாளர்கள் ஹேமந்த் குமார், அன்பு செழியன், காவலர் போலாரம ஆகியோர் நேரில்  விசாரணை நடத்தினார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *