“என்னை கொல்ல பார்க்கிறார்கள்!” MLA மார்க்கண்டேயன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை உடல் பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவமனை பின்புறமாக, காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள் என்றும், உடல் பரிசோதனை அறைக்கு கொண்டு சென்று என்னை கொள்ள பார்ப்பதாகவும் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 351-ல்3, 352, 353-ல் 2 என்ற மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்து அழைத்துச் சென்று, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காலை 7:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அழைத்து வந்த நிலையில், மாலை 6:30 மணி வரை, 11 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்து, உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பின்புறமாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மார்க்கண்டேயன் உள்ளே செல்லும் போது, என்னை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள் என்றும், உடல் பரிசோதனை அறிக்கை கொண்டு சென்று, என்னை கொல்லப்பார்க்கின்றனர் என சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *