
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும், நாடாளுமன்றத்திற்கு உள்ளே எதிரும், புதிருமாக இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே நட்பாக நடந்துகொண்டது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆச்சரியமடையச் செய்தது.
நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, புதிய ஆட்சி அமைத்த த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது.
இதனால், இந்தியா கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியே வந்தது. இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் – தி.மு.க. உறுப்பினர்களுக்கு அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டணி உடைந்த நிலையில், தி.மு.க. உறுப்பினர்களுக்கான இடத்தை மாற்றித்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இருக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் நட்பு பாராட்டி கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.
அதாவது, நாடாளுமன்றத்திற்கு உள்ளே எதிரும், புதிருமாக இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே நட்பாக நடந்துகொண்டது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆச்சரியமடையச் செய்தது.



