Sri Kamakshi Amman Temple: 176 கிராம் தங்கம், வெள்ளி, 59 லட்சம் ரொக்கப் பணம் வசூல்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மூலம் 176 கிராம் தங்கம், 295 வெள்ளி, 59 லட்சம் ரொக்கப் பணம் காணிக்கையாகச் வசூலாகியுள்ளது.

காஞ்சிபுரம்: சக்தி ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாடு எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காணிக்கையாகக் கோவில் உண்டியலில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி, பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்தி விட்டுச் செல்வார்கள்.பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்து விட்டுச் செல்லும் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களும் தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 59 லட்சத்து 67 ஆயிரத்து 335 ரூபாயும்,176 கிராம் தங்கமும், 295 கிராம் வெள்ளியும் உண்டியல் வசூலாகக் கிடைத்துள்ளது.உண்டியல் வசூலில் கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *