PM Modi: இந்திய மக்களை வேவு பார்க கடலுக்கு அடியில் உளவுக் கருவிகள்!

இந்தியாவில் மொத்தம் உள்ள 140 கோடி மக்களையும் பிரதமர் மோடி ரகசியமாக உளவு வேலை பார்த்து வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது…

இங்கிலாந்தில் உள்ள காக்னிட் மற்றும் செப்டியர் ஆகிய இரண்டு நிறுவனங்களும் உலக அளவில் உளவுத்துறைக்கு பெயர் பெற்ற நிறுவனங்களாகும்.

இவர்களிடமிருந்து ஏராளமான கண்காணிப்பு கருவிகளை இந்தியா விலை கொடுத்து வாங்கி அவற்றைக் கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

இதில் காக்னிட் நிறுவனம் அளித்துள்ள கருவிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் செல்போன்களின் குரல் பதிவு, எஸ்எம்எஸ் எனப்படும் மெசேஜ், இணையதள தொடர்புகள் மற்றும் ஈமெயில் தொடர்புகளை உளவு பார்த்துத் தகவல் சொல்லும் திறன் வாய்ந்ததாகும்

இதேபோல் செப்டியர் நிறுவனம் அளித்துள்ள கண்காணிப்பு கருவிகள் வாட்ஸ் அப் facebook இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை துப்பறிய வல்லது.

இந்தக் கருவிகளை அரசு தரப்பில் மட்டுமல்லாது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஜியோ நிறுவனமும் விலைக்கு வாங்கி உள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களின் செயல்பாடுகள்குறித்து பிரதமர் மோடி வேவு பார்த்து வருவதாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதேபோல் உகாண்டா நாட்டிலும் இத்தகைய கண்காணிப்பு கருவிகளை வாங்கி கடலுக்கடியில் பதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது

பிரதமர் மோடியின் மீதான இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *