Advertisements

இந்தியாவை பாதுகாக்க முடியும் என்றால் அம்பேத்கர் பெரியார் கொள்கைகளால் மட்டுமே முடியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடல் அருகில் 18 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்பேத்கரின் வெண்கல சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இதில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக, விசிக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசிய போது, இந்தியாவை பாதுகாக்க முடியும் என்றால் அம்பேத்கர் பெரியார் கொள்கைகளால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அம்பேத்கர் காண வேண்டிய சம நல்லிணக்கத்தை தமிழகத்தில் காண வேண்டுமென்றால் பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து, ஆர் எஸ் பாரதி பேசிய போது, மத்தியிலே இருக்கக்கூடிய பாஜக அரசு அம்பேத்கர் ஏற்றிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிவதற்குரிய முயற்சிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
Advertisements


