
ஏ ஆர் ரகுமானை அடித்துத் தூக்கிய அனிருத் -“இப்போ இவர்தான் நம்பர் ஒன்”
அகில இந்திய அளவில் தமிழ் இசைமைப்பாளர்களுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு .அந்த வகையில் இசைஞானி இளையராஜாவும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானும் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களாகத் திகழ்கிறார்கள்.அந்தப் பட்டியலில் இப்போது இளம் புயல் அனிருத்தும் இடம் பெற்று வருகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 திரைப்படம்மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் அனிருத் இவரது முதல் பாடலான கொலை வெறி பாடல் 40 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்து தனக்கெனத் தனி இடம் பிடித்தார் தற்போது அஜித் விஜய் ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளராக இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனான அனிருத் ரவிச்சந்திரன் தற்போது ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம்
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.
ஜவான் திரைப்படத்திற்கு அவர் 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகத் தெரிகிறது உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இன்னும் 5 கோடி சம்பளத்தை தாண்டாத நிலையில் அனிருத் 10 கோடி சம்பளத்தை எட்டியுள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு முன்பாக அவர் தலா ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளமாகப் பெற்று வந்தார் அந்த வகையில் அவரிடம் தற்போது சுமார் 50 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும் அவர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் அளவில் சம்பளம் பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியையென அடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் விலை உயர்ந்த வெளிநாட்டு காரைப் பரிசளித்தார் ஆனால் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனிருத்துக்கு அவர் கார் பரிசளிக்கவில்லை என்பது அனிருத் ரசிகர்களிடம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது


