இஸ்ரோவில் பணியாற்றி உலக அளவில் சாதனை படைக்கலாம் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது…
விண்வெளியை ஆய்வு செய்வதில் இந்தியா தற்போது முன்னணி இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. வான மண்டலத்தை ஆராய்ச்சி செய்யும் உலக நாடுகளில் நாலாவது இடத்தைப் பெற்று இருக்கும் இந்தியா நிலவின் தென் துருவத்தை ஆராய்வதன் மூலம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
நிலவைத் தொடர்ந்து தற்போது சூரியனையும் ஆராயும் பணியை இஸ்ரோ செய்து வருகிறது
இதில் உலகமே வியக்கும் வண்ணம் தற்போது தமிழர்கள் மிகப் பிரமாண்டமான சாதனைகள் புரிந்து வருகிறார்கள். சந்திராயன் ஒன்னு சந்திராயன் ரெண்டு சந்திராயன் மூன்று ஆகிய மூன்று விண்வெளி திட்டங்களுக்கும் தமிழர்கள் தான் தலைமை பொறுப்பேற்று வெற்றியைத் தேடி தந்திருக்கிறார்கள்.
தற்போது சூரியனை ஆராயும் ஆதித்யா எல் ஒன் விண்கலத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் தலைமை திட்ட அதிகாரியாக இருக்கிறார். இவர் ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாமும் இதே போல் இஸ்ரோவில் பணியாற்றி உலக அளவில் சாதனை படைக்கலாம் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இஸ்ரோவில் சேர்ந்து விஞ்ஞானி ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நமது ஜெம் டிவி உங்களுக்குத் தொகுத்து வழங்கும் மிக அருமையான தகவல்கள் இதோ…
நீங்கள் விஞ்ஞானியாக ஆசைப்பட்டால் முதலில் நீங்கள் படிக்க வேண்டிய இரண்டு முக்கிய பாடங்கள் ஒன்று அறிவியல் இன்னொன்று கணிதம் எனவே பள்ளியில் படிக்கும்பொழுது அறிவியலுக்கும் கணிதத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் இதில் அல்ஜீப்ரா ஜியோமெட்ரி ஆகியவற்றை மிக நன்கு படிக்க வேண்டும்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு அறிவியல் அல்லது பொறியியல் என எந்தத் துறையில் வேண்டுமானாலும் பட்டப்படிப்பு படிக்கலாம்.பி.டெக் படித்தாலும் இஸ்ரோவில் சேர்வதற்கான தகுதி இருக்கிறது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்டெக், எம் எஸ் சி, பி எச்.டி யெனப் பல படிப்புகள் உள்ளன இது தவிர சென்னையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேத்தமேட்டிக்கல் சயின்ஸ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோ பிசிக்ஸ், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் எனப் பல படிப்புகள் உள்ளன. இங்குப் படிப்பதன் மூலம் இஸ்ரோவில் நுழைவதற்கான முழுமையான தகுதி உங்களுக்குக் கிடைத்துவிடும்.
இது தவிர இஸ்ரோ சார்பிலும் இஸ்ரோ பல்கலைக்கழகத்தில் இணைந்தும் படிக்கலாம்.
இத்தகைய கல்வியறிவை வளர்த்துக் கொள்வதுடன் எதையாவது உருவாக்கும் செயல் திறனையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும் இதனை அடுத்து இறுதி கட்டமாக இஸ்ரோ நடத்தும் தேர்வில் நீங்கள் கலந்து கொள்ளலாம் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் இஸ்ரோவில் நீங்கள் பணிக்குச் சேரலாம். தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞானிகளுக்கு அதிகப்படியான தேவைகள் இருக்கின்றன வெகுவிரைவிலேயே தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கிறது.
எனவே விஞ்ஞானிகளுக்கான வேலை வாய்ப்பு தமிழகத்தில் பெருகிவரும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணம் விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோவில் திட்டத் தலைவராக இருந்து பணியாற்றிய அனைவருமே மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். அரசு பள்ளியில் படித்தவர்கள். தங்களது தனிப்பட்ட அறிவுத் திறன் மூலமும் விடா முயற்சிமூலம் இன்று உலகம் முழுவதும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புகழ் சேர்த்து இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் நீங்களும் அந்தப் பட்டியலில் இணையலாம். நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஜெம் டிவி வாழ்த்துகிறது
