
பல பத்தாண்டுகளாகத் திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்தும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை என்று நாம் தமிழர் கட்சிக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்துப் பரப்புரைக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசினார்.
அப்போது, திமுக 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.




