
மருத்துவ இடங்களை திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையினை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும், அனைத்து மருத்துவமனைகளும் தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கூறினார். 2024-இல் 119 இடங்களும், 2025-இல் 149 இடங்களும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும் திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் சம்பவத்தின் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு ரத்து செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பான வாதங்களை மூலம் நியாயம் கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணி தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


