ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – ஜோர்டான் தாக்குதலுக்குப் பதிலடி!

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை மீண்டும் நடத்தியுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரானின் முக்கிய இலக்குகள் மீது நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகமான சென்ட்காம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கத் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதி ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணைகள் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *