Advertisements

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி இளந்திரையன், மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
விசாரணையின்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்களும் தெளிவாக உள்ளன. இந்நிலையில் எதன் அடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வழக்கின் முதல் தகவல் அறிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
Advertisements



